சாஹல் உலக கோப்பை அணியில் இல்லாத நிலையில், அவரது மனைவி தனஸ்ரீ வர்மா 2023 உலக கோப்பை கீதத்தில் டான்ஸ் ஆடியுள்ளது ட்ரோல் ஆகி வருகிறது

அதிகம் எதிர்பார்க்கப்படும் 2023 ஒருநாள் உலகக் கோப்பை போட்டி இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது. இந்த பெரும் தொடர் அக்டோபர் 5ஆம் தேதி முதல் இந்தியாவில்தொடங்கவுள்ளது. ஏறக்குறைய அனைத்து நாடுகளும் இந்த போட்டிக்கான அணிகளை ஏற்கனவே அறிவித்துள்ளன. ரோஹித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட உலகக் கோப்பை அணியையும் பிசிசிஐ அறிவித்துள்ளது. 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியை இந்தியா நடத்தியது அனைவரும் அறிந்ததே. அந்த உலகக் கோப்பையின் போது ஷங்கர் மகாதேவன் பாடிய உலகக் கோப்பை கீதம் எவ்வளவு பெரிய ஹிட் ஆனது என்பது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் மீண்டும் இந்த முறை உலகக் கோப்பையை இந்தியா நடத்தும் நிலையில், உலகக் கோப்பைக்கான தீம் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. நேற்று   ஐசிசி வெளியிட்டது. ஓடும் எக்ஸ்பிரஸ் தீமில் ரன்வீர் சிங்கின் நடனத்துடன் கூடிய பாடல் ஹிட் ஆனது. இந்த பாடலில் இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹலின் மனைவியின் தோற்றம் சிறப்பு ஈர்ப்பாக அமைந்தது.

இந்தப் பாடலுக்கு ப்ரீதம் இசையமைத்துள்ளார். ஷ்லோக் லால் மற்றும் சவேரி வர்மா பாடல் வரிகளை இயற்றியுள்ளனர். ப்ரீதம், நகாஷ் அஜீஸ், ஸ்ரீ ராம சந்திரா, அமித் மிஸ்ரா, ஜோனிதா காந்தி, அகாசா, சரண் ஆகியோர் பாடியுள்ளனர். சரண் ராப் எழுதினார். இது ஒருபுறம் இருக்க யுஸ்வேந்திர சாஹல் உலக கோப்பை அணியில் இல்லாத நிலையில், அவரது மனைவி தனஸ்ரீ வர்மா 2023 உலக கோப்பை கீதத்தில் டான்ஸ் ஆடியுள்ளது ட்ரோல் ஆகி வருகிறது. இதற்கு பலரும் பலவிதமான கமெண்ட் செய்து வருகின்றனர்.

முன்னதாக சாஹல் 2023 ஆசிய கோப்பை மற்றும் 2023 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறவில்லை. இருப்பினும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரிலாவது அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,  அதிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதற்கிடையே சாஹல் கவுண்டி சாம்பியன்ஷிப் 2023ல் கென்ட் அணிக்காக ஆடி வருகிறார்.

https://twitter.com/sumanthatluri/status/1704293187517665468