ஒவ்வொரு வருடமும் மார்ச் 1-ம் தேதி உலக சிவில் பாதுகாப்பு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினம் கடந்த 1990 ஆம் ஆண்டில் சர்வதேச உள்நாட்டு பாதுகாப்பு அமைப்பால்(international civil defence organisation – ICDO) ஏற்படுத்தப்பட்டது. இந்த தினம் 1972 ஆம் ஆண்டில் உள்நாட்டு பாதுகாப்பு அரசியலமைப்பானது அரசகங்களுக்கு இடையேயான ஒரு அமைப்பாக நடைமுறைக்கு வந்ததை குறிக்கின்றது.

சிவில் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து உலக மக்களின் கவனத்தை ஈர்ப்பதும் பேரழிவுகளுக்கு எதிராக போராடுவதற்கு பொறுப்பான அனைத்து சேவைகளின் முயற்சிகள்,ஞாபகம் மட்டும் சாதனைகளுக்கு மரியாதை செலுத்துவது இந்த தினத்தை முக்கிய நோக்கம் ஆகும். இந்த ஆண்டு உலக சிவில் பாதுகாப்பு தினத்தின் கருப்பொருள், குழந்தைகளின் பாதுகாப்பு நமது பொறுப்பு என்பதாகும். சிவில் பாதுகாப்பு சட்டம் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்த தினம் ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்பட்டு வருகிறது.