அமெரிக்க நாட்டின் ஓரிகான் நகரில் ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் மூன்று வயது குழந்தையை ரயில் பாதையில் தள்ளிவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க நாட்டின் ஓரிகான் நகரத்தில் இருக்கும் போர்ட்லேண்டின் கேட்வே ட்ரான்சிட் சென்டர் மேக்ஸ் நடைமேடையில் தன் தாயுடன் மூன்று வயதுடைய பெண் குழந்தை நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த குழந்தையை திடீரென்று ஒரு பெண் ரயில் பாதையில் தள்ளிவிட்டார்.

இந்த அதிர்ச்சி காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவானது. அந்த வீடியோவில் குழந்தையின் பின்புறத்தில் இருந்த ஒரு பெண் திடீரென்று எழுந்து கீழே இருக்கும் ரயில் பாதையில் குழந்தையை தள்ளி விடுவது தெரிந்தது. அதன் பிறகு, அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ரயில் பாதையில் குழந்தை விழுந்ததால் முகத்தில் அடிபட்டது. அதிர்ஷ்டவசமாக, அங்கிருந்த ஒரு நபர் ரயில் வருவதற்குள் குழந்தையை பாதுகாப்பாக தூக்கி சென்று விட்டார். இந்த சம்பவத்தை அடுத்து குழந்தையை தள்ளிவிட்ட 32 வயதுடைய ப்ரியானா லேஸ் வொர்க்மேன் என்ற பெண் கைதாகியிருப்பதாக காவல்துறையினர் கூறியிருக்கிறார்கள்.