கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சானமாவு வனப் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உலா வருகிறது. அக்டோபர், நவம்பர் மாதங்களில் கர்நாடக மாநிலம் வன்னார் கட்டா வனப்பகுதியில் இருந்து யானை கூட்டங்கள் தமிழகத்திற்குள் ஊடுருவி வரும். இதேபோலகிரி வழியாக நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் தமிழக எல்லைக்குள் நுழையும். பல குழுக்களாக யானைகள் பிரிந்து தற்போது 50-க்கும் மேற்பட்ட யானைகள் சானமாவு வனப்பகுதிக்கு வந்தது.

தற்போது ராகி, நெல் அறுவடை சீசன் காலம் என்பதால் யானைகளை விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் யானையை ஜவளகிரி வனப் பகுதிக்கு விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.