கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை வழியாக யானைகள் பல பிரிவுகளாக பிரிந்து ஓசூர் சானமாவு வனப்பகுதிக்கு சென்றது. யானைகள் தக்காளி, ராகி, தென்னை, மா, பலா உள்ளிட்டு பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் நஷ்டம் அடைந்தனர். தற்போது யானைகள் தேன்கனிக்கோட்டை ஊடே துர்கம் வனப்பகுதி வழியாக போரூர் பள்ளம் வனப்பகுதி வரை சென்றது.

வனத்துறை அதிகாரிகள் அலட்சிய போக்குடன் இருப்பதால் தான் யானைகள் அட்டகாசம் செய்கிறது. பயிர் சேதங்களை தடுக்கவும் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.