கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு வனப்பகுதியில் சுற்றித் திரியும் காட்டு யானை நவமலை மின்சார வாரிய குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து 2 கார்களை தந்தத்தால் குத்தி சேதப்படுத்தியது. நேற்று நள்ளிரவு நேரத்தில் வனப்பகுதியை ஒட்டி இருக்கும் தோட்டத்திற்குள் நுழைந்த காட்டு யானை சுமார் 50 தென்னை மரங்களை சேதப்படுத்திவிட்டு ஆழியாறு அணைப்பகுதியில் நின்று கொண்டிருந்தது.

இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது, நவமலை ஆழியாறு பகுதியில் சுற்றித் திரியும் காட்டு யானைக்கு மதம் பிடித்திருக்கிறது. எனவே வாகன ஓட்டிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். யானைக்கு அருகே சென்று செல்பி எடுப்பது, அதிக ஒலி எழுப்பி தொந்தரவு கொடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என எச்சரித்துள்ளனர்.