தங்க நகைகளில் ஹால்மார்க் என்பது, தங்கத்தின் தூய்மை மற்றும் தரத்தை உறுதிப்படுத்தும் ஒரு முத்திரையாகும். இந்தியாவில், 916, 875, 750 போன்ற ஹால்மார்க் முத்திரைகள் தங்க நகைகளின் தூய்மையை குறிக்கப் பயன்படுகின்றன. இந்நிலையில் இந்தியாவில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தங்க நகை விற்பனையின் போது ஹால்மார்க்கை கட்டாயமாக கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்தியாவில் 803 மாவட்டங்கள் உள்ள நிலையில் 343 மாவட்டங்களில் மட்டுமே ஹால்மார்க் கட்டாயம் ஆக்கியது ஏன் என்று கேள்வி எழுப்பினர். அதோடு விரிவான பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.