நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்த இனத்தில் பிறந்ததிலேயே தமிழ் பேரினத்திற்கு என்று ஒரு தேசம் வேண்டும் என்ற கனவு கண்ட ஒரே மகன்  நம் உயிர் தலைவன் பிரபாகரன் மட்டும் தான். அவனுடைய பாட்டன்… என்னுடைய பாட்டன்.. உன்னுடைய பாட்டன்… அரசனுக்கு அரசன்…. அருண்மொழி சோழன்… அவன் அன்பு மகன் இராசேந்திர சோழனுக்கு இந்த கனவு இருந்திருந்தால் ? உலகில் பாதி நாடு தமிழர் நாடு. அவன் பொழுதுபோக்கு போரிட்டு போயிட்டான்.

 ஆர்.எஸ்.எஸ், பிஜேபி ஒருத்தரும் போராடல? 

இந்த இந்திய நில பரப்பு அடிமைப்பட்டு கிடைக்கும் போது எங்களுடைய பெருமைமிக்க… மதிப்புமிக்க…. தாத்தாக்கள் எங்களுக்கு செய்த துரோகம்…. தெய்வத்திருமகன் முத்துராமலிங்க தேவரும், பெருந்தலைவர் எங்கள் தாத்தா காமராஜரும் செய்த துரோகம். முகமது அலி ஜின்னா அடிமைப்பட்டு கிடக்கிற இந்த நிலப்பரப்பில் விடுதலைக்காக போராடும்போது….  ஆர்எஸ்எஸ், பிஜேபியில் இருந்த ஒருத்தன் ஒரு போராட்டமும் போராடவில்லை. பாகிஸ்தான், பங்களாதேஷ்ல இருக்குற மக்கள் எல்லாம் இந்த நாட்டின் விடுதலைக்கு போராடியவர்கள்.

டக்குன்னு கேட்ட முகமது அலி ஜின்னா:

1946இல் வர வேண்டிய விடுதலை 1947 வரை தள்ளியதற்கு காரணம் முகமது அலி ஜின்னா.  லார்டு மவுண்ட்பேட்டன் பிரபு கிட்ட போகும்போது ஜின்னாவை கன்வின்ஸ் பண்ணுங்க என சொன்னார். பாகிஸ்தான் தனி நாடு என அறிவிக்க வேண்டும் பிறகுதான் மத்தது என சொல்லிவிட்டார் முகமது அலி ஜின்னா . ஓராண்டு பிரச்சனை ஓடுது. எங்க தாத்தாங்க ரெண்டு பேரு கொஞ்சம் யோசிச்சிருக்க வேண்டாமா ? ஜின்னா எதுக்கு கேட்டுட்டு இருக்கான் யோசிச்சிருக்கணும்ல….

காந்தி பொதுக்கூட்டம்: 

அதே மாதிரி முகமது அலி ஜின்னா என்ன யோசிக்கிறாரு  ? ஆங்கிலேயன் ஆட்சி காலத்திலேயே இஸ்லாமிய மக்களை அடிக்கிறான், ஒழிகிறான். ஒருவேளை சுதந்திரம் இவனிடத்தில் போனால் இஸ்லாமிய மக்கள் பாதுகாப்பாக இங்கு வாழ்வது சாத்தியம் இல்லை. அவனுக்கு அப்போதே மூளையில் பொரிதட்டிட்டு. காந்தி என்ன பன்னிருக்காரு ? ரெண்டு, மூணு பொதுக்கூட்டத்தில் முகமது அலி ஜின்னாவை வச்சிக்கிட்டு…

டைவர்ஸ் தான் முடிவு:

இந்தா நம்மோடு சிறுபான்மை மக்களின் தலைவர் முகமது அலி ஜின்னா உக்காந்து இருக்கிறார் அப்படி சொல்லிட்டாரு… காந்தி சொன்னது, முகமது அலி ஜின்னா பாக்குறாரு… நம்ம என்ன சிறுபான்மை? எல்லாரு மாதிரி தான நாமளும், இந்த நாட்டின் விடுதலைக்கு போராடுறோம். இவன் சிறுபான்மை, சிறுபான்மை என ஸ்பெஷல் மென்சன் பண்ணுறானே இந்த பரதேசி பையன்…  எதுக்கு பண்றான் ? என முகமது அலி ஜின்னா  யோசிச்சிறாரு…  சரி இவனோட சேர்ந்து வாழ முடியாது. டைவர்ஸ் தான் என  முடிவுக்கு வந்து,   பாகிஸ்தான் தனி நாடு என கேட்கின்றார்.

சுபாஷ் சந்திர போஸ், காந்தி:

முகமது அலி ஜின்னாவோடு பேச முடியாது. முகமது அலி ஜின்னா பெரிய ஸ்காலரு… உயர்ந்த ஒல்லியான உருவம்….  ஆள்தான் நோஞ்சான் மாதிரி இருப்பான், பெரிய வீரன்… முகமது அலி ஜின்னா உறுதியாக இருந்ததால், பாகிஸ்தானை பிரிச்சு கொடுத்து விட்டு தான் இந்தியாவிற்கு விடுதலை கொடுக்க முடிந்தது. எங்க தாத்தா ரெண்டு பேரும் ஏமாற்றம்…. ஒருத்தன் பெரும் கொடுமையான காந்தி பக்தன், நேரு பக்தன். ஒருத்தர் சுபாஷ் சந்திர போஸ் பக்தன். இதுல இந்தியா Our  நேஷ்சன் என சொல்லிட்டு  இருந்தாங்க.

லாடு மவுண்ட் பேட்டன் பிரபு:

முகமது அலி ஜின்னா பாகிஸ்தானுக்கு தனி நாடு கொடுங்க என கேட்கும் போது என் தாத்தா இங்க ரெண்டு பேரும்,  தனித்தமிழ் நாடு என்று கேட்டு இருந்தால்…  லாடு மவுண்ட் பேட்டனுக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல… நான் இந்தியாவைவிட்டு போக போறேன்…  இந்தியா ஒண்ணா இருந்த என்ன ?  மண்ணா இருந்தா என்ன ? உனக்கு என்ன வேணும் தமிழ் நாடா ? உனக்கு கேரளாவா ? உனக்கு ஆந்திராவா ? இந்த வச்சிக்கோ என பிரிச்சி கையெழுத்து போட்டு போயிட்டே இருந்து இருப்பான்.

நெஞ்சி தண்ணீர் வலிக்க கத்துறோம்:

எங்க ஆளுங்க…. இந்தியா நம்ம நாடு…. இப்படி பேசி விட்டுட்டு இருந்ததால் பேரன்கள்  பூராம் நெஞ்சி தண்ணீர் வலிக்க கத்திட்டு கிடக்கோம்….  நாங்க வரலாறை படிக்கும்போது கங்கை கொண்டோம்…. கடாரம் வென்றோம்…. காவிரியில் கொஞ்சோண்டு தண்ணி கொண்டோமா ? …உனக்கு புரியுதா ?  ஒன்னும் கிடையாது, அப்போ எங்க இருந்து ஆரமிக்க வேண்டி இருக்கு பாரு என தெரிவித்தார்.