பொதுவாக நமக்கு சூரியன் குறித்த ஏராளமான கேள்விகளும் சந்தேகங்களும் இருக்கும். எனவே சூரியன் குறித்து சில சுவாரசியமான விஷயங்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். ஹீலியம் மற்றும் ஹைட்ரஜன் அனுக்களால் ஆன ஒரு கோல வடிவ உருண்டை தான் சூரியன். நமது சூரியன் தான் பூமிக்கும் மற்ற கோள்களுக்கும் நட்சத்திரமாகும். நம் சூரியன் போன்றே இந்த பிரபஞ்சத்தில் நிறைய நட்சத்திரங்கள் உள்ளனவா..?

சூரியன் எத்தனை அளவு பெரியது என்றால் கிட்டத்தட்ட நம் பூமியை போன்று 1 லட்சத்து 30 ஆயிரம் பூமிகளை சூரியனுக்குள் வைக்கலாம். அந்த அளவிற்கு பெரியது என சொல்லப்படுகிறது. ஆய்வாளர்களின் கூற்றுப்படி 130 மில்லியன் வருடங்களுக்குப் பிறகு சூரியன் ஆனது நமது பூமியை விழுங்கும் என்று கூறுகிறார்கள். ஏனென்றால் அதில் உள்ள ஹைட்ரஜன் அணுக்கள் எரிவதால் சூரியன் விரிவடைய தொடங்கும். இதன் காரணமாக புதன், வெள்ளி மற்றும் நம் பூமியை சூரியன் விழுங்கும் என்று ஆய்வாளர்களால் சொல்லப்படுகிறது.

சூரியனின் வயது தற்போது ஐந்து பில்லியன் ஆண்டுகள் இருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இது ஒரு நட்சத்திரத்தின் நடுநிலை காலம் எனலாம். இன்னும் சில மில்லியன் ஆண்டுகள் கழித்து சூரியன் ஆனது தன்னுடைய இறுதி காலத்தை அடையும். ஏனென்றால் அப்போது ஹைட்ரஜன் எரிய தொடங்கும் எனக் கூறப்படுகிறது. சூரியன் வெடித்தால் கூட நமக்கு 8 நிமிடங்களுக்கு பிறகு அந்த ஒரு வெடிப்பை நம்மால் பார்க்க முடியும்.

ஏனென்றால் சூரியனிலிருந்து நம் பூமிக்கு ஒலியானது பயணிக்க கூடிய நேரம் 8 நிமிடங்கள் ஆகும். இந்த சூரிய புயல் என்பது சூரியனில் ஏற்படக்கூடிய ஒரு வகை மாற்றம் என கூறலாம். அதாவது ஒவ்வொரு 11 வருடத்திற்கும் சூரியனானது தன்னுடைய காந்த துருவங்களை மாற்றும். அதாவது வட துருவம் தென் துருவமாகவும் தென் துருவம் வட துருவமாகவும் மாறும். அந்த புயலால் பூமிக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது என கூறப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.