புனேயில் செயல்படும் புனே மாநகரப் போக்குவரத்துக்கழக (PMPML) பேருந்தில் ஒரு பெண் ஏற்படுத்திய கோலாறு குறித்த வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. அத்துடன், அந்த வீடியோவில், அந்த பெண் தனது கால்களை முன் இருக்கையின் மேல் வைத்து உட்காரும் காட்சி காணப்படுகிறது. மற்ற பயணிகள் மற்றும் நடத்துனர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தபோதும், “இந்த பேருந்து உங்கள் அப்பாவுடையதா?” என வாதிட்டுக் கொண்டு, கால்களை கீழிறக்க மறுக்கிறார்.

 

நடத்துனர் பலமுறை கூறியும் அவர் மறுத்ததால், கடைசி தடவையாக “கால்களை கீழே எடுக்க விருப்பமில்லை என்றால் அடுத்த நிலையத்தில் இறங்குங்கள்” என கடுமையாக கூறினார். இதுபோன்ற சம்பவம் PMPML பேருந்துகளில் நடப்பது இது முதல்முறை அல்ல. இந்த வகை ஒழுங்குக்கேடுகள் நிகழ்வது குறித்து பொதுமக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.