தமிழ்நாட்டில் வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் பணியின் தாக்கம் குறையும் என்று மாநில ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் பங்கேற்ற மாணவர்கள் துருக்கி, சிரியா நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தினர். இந்த அறிவியல் கண்காட்சியில் மாணவர்களுடன் கலந்துரையாடிய பாலச்சந்திரன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது தமிழ்நாட்டில் வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் இன்னும் ஐந்து நாட்களில் பனியின் தாக்கம் குறையும் என தெரிவித்தார். வரும் கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் எப்படி இருக்கும் என்பதை பிப்ரவரி மாத இறுதிக்குள் கணித்து அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய பாலச்சந்திரன் நிலநடுக்கத்தை அளவிடும் கருவிகளை மட்டுமே நாம் பயன்படுத்தி வருகிறோம் என்றும் நிலநடுக்கம் வருவதற்கு முன்பாக கணிக்க முடியாது என தெரிவித்தார்.