தமிழகத்தில் கொண்டாடப்படும் பல பண்டிகைகளில் மதத்துடன் தொடர்பு படுத்தி சொன்னாலும் அதன் உள்ளே இன்றும் உயிர் உடன் தமிழர்களின் இயற்கையான வழிபாடு பொதிந்து உள்ளதை காண முடியும். கார்த்திகை தீபம் மற்றும் ஆடிப்பெருக்கு உள்ளிட்ட பல பண்டிகைகள் உள்ளன. ஆனால் தமிழகத்தில் ஜாதி மத வேறுபாடு இல்லாமல் அனைவராலும் கொண்டாடப்படும் பண்டிகை என்றால் அது பொங்கல் பண்டிகை மட்டும்தான். தமிழகத்தில் ஒருபோகம், இரு போகம் மற்றும் முப்போகம் என அறுவடை செய்யும் நிலப் பகுதிகள் இருக்கின்றன.

ஒரு மாவட்டத்திற்கு உள்ளேயே இந்த நிலப்பகுதிகள் மாறுபடும். அதனால் பொதுவாக தை மாத அறுவடையை அறுவடை திருநாளாக கொண்டாடினர். எனவே தை மாதம் பிறக்கும் நாளை இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் நாளாக தமிழர்கள் வணங்கி வழிபட்டனர். சங்ககால முதலை தைப்பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகையின் நான்கு நாட்களுமே இப்போதும் கூட உழவர்களுடன் பின்னிப்பிணைந்து போகி பண்டிகை, தைப்பொங்கல், மாட்டுப் பொங்கல் மற்றும் காணும் பொங்கல் என நான்கும் இணைந்துள்ளது. இதனாலையே உழவர்களின் வாழ்வுடன் பின்னிப்பிணைந்த பொங்கல் பண்டிகையை தமிழர் திருநாள் என்று கூறுகிறோம்