ஆடி மாதத்தில் தேடி விதைத்த விளைச்சல் அறுவடை செய்து பயனடையும் பருவமே தை மாதம் ஆகும். அந்த அறுவடையில் கிடைத்த பொது அரிசியை சர்க்கரை, பால் மற்றும் நெய் சேர்த்து புது பானையில் பொங்க வைத்து சூரியனுக்கு படைக்கும் திருநாள் தான் பொங்கல் திருநாள். பொங்கல் பண்டிகை என்பது எப்போதும் புது பானை வைத்து பொங்கல் செய்வது அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனால் எந்தெந்த லக்னங்களில் செய்வது உகந்தது என்றால் இதற்கு மகர மற்றும் கும்ப லக்னங்கள் உத்தமமாகும் மற்றவை மத்திமம் ஆகும். இன்று பொங்கல் வைக்க சிறந்த நேரம் எது என்பது குறித்து இதில் பார்க்கலாம்.

அதன்படி காலை 7.30 மணி முதல் 8.30 மணி, பகல் 1.30 மணி முதல் 2.30 , மாலை 3.30 முதல் 4.30 மணி வரையில் பொங்கல் வைக்கலாம். கிராமங்களில் மக்கள் இந்த தைப்பொங்கலை திறந்த வெளியில் அல்லது தங்கள் வீட்டின் முற்றத்தில் கொண்டாடுகிறார்கள். இதுதான் பாரம்பரிய முறையாகும். மஞ்சள் மற்றும் குங்குமம் தடவிய பாத்திரத்தில் புதிய மஞ்சள் இலைகளை கட்டி பாத்திரத்தில் பொங்கலை செய்வார்கள். அந்தப் பொங்கல் பொங்கி வந்ததும் மக்கள் பொங்கலோ பொங்கல் என்று கூறுவர்.