
டான் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் ஆகாஷ் வீட்டு திருமண நிகழ்ச்சி சமீபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தனுஷ், நயன்தாரா சர்ச்சைக்கு பிறகு தற்போது தான் தயாரிப்பாளர் திருமண விழாவில் ஒன்றாக கலந்து கொண்டனர். இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாக பரவி வந்தது. இந்த திருமணத்தில் சிவகார்த்திகேயன், தனுஷ், விக்னேஷ் சிவன், அனிருத், நயன்தாரா போன்ற பல பிரபலங்கள் கலந்து கொண்ட புகைப்படங்களும் வைரல் ஆகியது.
இந்த நிலையில் தற்போது திருமண விழாவை அடுத்த இரவு நேர திருமண பார்ட்டியில் நடிகர் சிம்பு மற்றும் நடிகர் தனுஷ் ஒன்றாக கலந்து கொண்டனர். திரைத்துறையைப் பொறுத்தவரை தனுஷ் மற்றும் சிம்புவுக்கு இடையே தொடர்ந்து போட்டிகள் நிலவி வரும் சூழ்நிலையில் இருவரும் ஒன்றாக இணைந்து பார்ட்டியில் கலந்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவலாக பரவி வருகிறது. இதற்கு ரசிகர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
