சமூக வலைதளங்களில் தினமும் பரவலாக திருமண வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அப்படியான ஒரு வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகின்றது. அந்த வீடியோவில், திருமண நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்க, நண்பர்கள் மணமகனுக்கு சந்தனம் வைத்து மொய் கொடுப்பதைக் காணலாம்.

ஆனால், அவர்களில் ஒருவர், மணமகன் கையில் வைத்திருக்கும் செல்போனில் உள்ள QR குறியீடை ஸ்கேன் செய்து அருகே நேரடியாக பணத்தை டிரான்ஸ்ஃபர் செய்கிறார். பார்ப்பவர்களை இவை முதலில் ஆச்சரியத்தில் ஆழ்த்தினாலும், பின்னர் கலகலப்பாக சிரிக்க வைக்கிறது.

 

இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ளது. இதுவரை ஆயிரக்கணக்கான பார்வைகள், லைக்குகள், மற்றும் கருத்துகளை பெற்றுள்ளது. “இதுதான் யூபிஐயின் சரியான பயன்பாடு!” என்று ஒருவர் கமெண்ட் செய்திருக்க, “நான் என் கல்யாணத்திலேயே இதே மாதிரி பண்ணேன்” என மற்றொருவர் கூறியுள்ளார்.

பலரும் நகைச்சுவை எமோஜிகளுடன் பதிலளித்து இந்த வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர். இப்போது கல்யாண மொய் டிஜிட்டலாகும் நிலையில், இந்த வீடியோ பார்ப்பவர்களை ரசிக்க வைத்துள்ளது.