விவசாயிகளுக்கு 24 மணிநேரமும் மும்முனை மின்சாரத்தை வழங்க வேண்டும் என இபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். விவசாயிகளுக்கு 12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என மின்வாரியம் அறிவித்தது. இதுகுறித்து இபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முறை வைத்து மின்சாரம் வழங்குவது ஏற்புடையதல்ல. திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் மின் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான காரணம் புரியாத புதிர் தான்” என அவர் விமர்சித்துள்ளார்.

தற்போது தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு 12 மணி நேர இலவச மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இதனை 24 மணி நேரமாக உயர்த்த வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி இன்று காலை அறிக்கை வாயிலாக வலியுறுத்தி இருந்தார். இது குறித்து பேசியிருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி, அதிமுக ஆட்சிக் காலத்தில் 12 மணி நேரம் தான் மின்சாரம் வழங்கப்பட்டது. அடுத்த ஆண்டிலிருந்து 24 மணி நேரம் வழங்கப்படும் என்று உறுதி அளித்தார்.