அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயம்கொண்டம்- சிதம்பரம் சாலையில் கழிவு நீர் வாய்க்கால் செல்கிறது. அந்த பகுதியில் இருக்கும் வணிக நிறுவனங்கள், கோழி கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் இந்த வாய்க்கால் வழியாக செல்வதால் துர்நாற்றம் வீசுகிறது.

இந்நிலையில் அந்த பகுதியில் ஹோட்டல்கள், வங்கி, தனியார் மருத்துவமனைகள் இருப்பதால் திறந்த நிலையில் இருக்கும் கழிவுநீர் வாய்க்கால் மூலம் பொதுமக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அந்த சாக்கடை கழிவு நீர் வாய்க்கால் சுமார் 25 மீட்டர் தூரம் இருக்கிறது. அதன் இருபுறமும் தடுப்பு சுவர் அமைத்து சிமெண்ட் சிலாப் போட்டு மூட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.