
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த திரைப்படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இந்த படம் வருகிற செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் பிரபு, பிரசாந்த், சினேகா, லைலா, மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த திரைப்படத்தில் விஜய் அப்பா மகன் என இரண்டு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மறைந்த பிரபல நடிகரான விஜயகாந்த்தை AI தொழில்நுட்பம் மூலம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் பயன்படுத்தி உள்ளனர்.
இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். ஏற்கனவே படத்திலிருந்து நான்கு பாடல்கள் ரிலீஸ் ஆகி உள்ளது. சமீபத்தில் ரிலீசான மட்ட பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அது மட்டும் இல்லாமல் கோட் படத்தின் ட்ரெய்லரில் இடம் பெற்றிருக்கும் ஆக்சன் காட்சிகளை பார்த்து ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். படம் 3 நாட்களில் ரிலீஸ் ஆக உள்ளதால் தற்போது படக்குழுவினர் ப்ரோமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
எப்போதுமே விஜய் நடிக்கும் படங்களுக்கு இசை வெளியீட்டு விழா நடத்தப்படும். ஆனால் இந்த முறை இசை வெளியீட்டு விழா நடத்தவில்லை. விஜய் தனது 69-ஆவது படத்துடன் சினிமாவில் இருந்து அரசியலில் ஈடுபட போகிறார். விஜயின் 69 ஆவது படத்தை ஹச்.வினோத் இயக்குகிறார். தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் விஜயின் 68 ஆவது படம். இந்த படத்திற்காக விஜய் 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.