தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் கடந்த மாதம் தி கோட் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் கெஸ்ட் ரோலில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் நடித்த காட்சியில் ஒரு துப்பாக்கியை சிவகார்த்திகேயன் கையில் கொடுத்து நீங்க பார்த்துக்கோங்க என்று சொல்வது போல் காட்சி அமைந்துள்ள நிலையில் சிவகார்த்திகேயன் தற்போது எங்கு சென்றாலும் துப்பாக்கி கனம் எப்படி இருக்கிறது என்று பலரும் கேள்வி கேட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் பட விழாவில் சிவகார்த்திகேயனிடம் தொகுப்பாளர் ஒரு கேள்வி கேட்டுள்ளார் அதில் விஜய் கொடுத்த துப்பாக்கியா அல்லது அவர் பரிசாக கொடுத்த வாட்ச்சா எது உங்களுக்கு ஸ்பெஷல் என தொகுப்பாளர் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு சிவகார்த்திகேயன் எதிர்பாராத பதிலை அதாவது தளபதி கொடுத்த அன்பு தான் எனக்கு ஸ்பெஷல் என்று கூறியுள்ளார்.