
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘வேட்டையன்’. இந்த படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பாலிவுட்டின் பேரரசு அமிதாப் பச்சன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி வரும் இந்த படத்தின் பிரீவ்யூ இன்று மாலை 7 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.இந்தப் படத்தின் படப்பிடிப்பு கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்றது. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பாடல்கள் வெளியான போதே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இப்போது இந்த படத்தின் பிரீவ்யூ வெளியீட்டால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. ஏற்கனவே ஹண்டர் வந்துட்டார் பாடல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. என்பது குறிப்பிடத்தக்கது.