வேலூரில் மாபெரும் புத்தகத் திருவிழா மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுநூலகத்துறையின் சார்பாக நேதாஜி மைதானத்தில் சென்ற 24-ஆம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. இந்த புத்தக விழாவில் தென் இந்திய பதிப்பாளர்கள், புத்தக விற்பனையாளர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்போடு 67 பதிப்பகங்களின் சார்பில் மொத்தம் 104 புத்தக அரங்குகளானது அமைக்கப்பட்டிருக்கிறது.

அதோடு ஒவ்வொரு நாட்களிலும் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் பயன்படும் அடிப்படையில் மாலை 5:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை சிறந்த பேச்சாளர்களின் சொற்பொழிவுகள், பட்டிமன்றம் மற்றும் அறிவுசார்ந்த பல கலை நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் வேலூரில் இன்று மாலையுடன் நிறைவடைய இருந்த புத்தக திருவிழாவானது மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வருகிற 12 ஆம் தேதி வரை புத்தக கண்காட்சி நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.