தமிழகத்தில் சளி, இருமலுடன் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல் பற்றி மக்களிடம் அரசு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று பாமக ராமதாஸ் வலியுறுத்தி இருக்கிறார். இதுபற்றி அவர் டுவிட்டர் பதிவில் “இந்தியாவில் ஏ எச்3என்2 வகை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சளி, ஒரு வாரத்திற்கும் கூடுதலாக நீடிக்கும் இருமல் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு தெரிவித்துள்ளது.

ஏ எச்3என்2 காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் சிலருக்கு மூச்சுத்திணறல், நிமோனியா போன்றவை தாக்கக்கூடும். இப்போது ஏற்பட்டுள்ள சூழலை மிகவும் எச்சரிக்கையுடனும்,  விழிப்புடனும் எதிர்கொள்ளவேண்டும். இதுபற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். தமிழகம் முழுவதும் தொடக்க நலவாழ்வு மையங்கள் மூலம் மருத்துவ பாசறைகளை நடத்தவும் ஏற்பாடு செய்யவேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.