ஏப்ரல் 16 கிரிகோரியன் ஆண்டின் 106 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 107 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 259 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

73 – யூதக் கோட்டை மசாடா உரோமர்களின் பல மாத கால முற்றுகையின் பின்னர் உரோமர்களிடம் வீழ்ந்தது. பாரிய யூதக் கிளர்ச்சி முடிவுக்கு வந்தது.

1346 – செர்பியப் பேரரசு பால்கன் குடாவின் பெரும் பகுதிகளைக் கைப்பற்றியதுடன், இசுடெபான் துசான் பேரரசராக அறிவிக்கப்பட்டார்.

1444 – இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் இடையில் ஐந்து ஆண்டுகள் போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டது.

1520 – ஐந்தாம் சார்லசின் ஆட்சிக்கு எதிராக எசுப்பானியாவில் கிளர்ச்சி ஆரம்பமானது.

1582 – எசுப்பானிய தேடல் வீரர் எர்னாண்டோ டி லேர்மா அர்கெந்தீனாவில் சால்ட்டா என்ற குடியேற்றத் திட்டத்தை கண்டுபிடித்தார்.

1799 – பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: டாபோர் மலை சமரில் பிரான்சின் முதலாம் நெப்போலியன் உதுமானியத் துருக்கியரை யோர்தான் ஆற்றுக்கு அப்பால் விரட்டினான்.

1818 – கனடாவுடனான எல்லை குறித்த உடன்பாட்டை அமெரிக்க மேலவை ஏற்றுக் கொண்டது.

1853 – இந்தியாவின் முதலாவது பயணிகள் தொடருந்து சேவையை கிரேட் இந்தியன் பெனின்சுலார் ரயில்வே மும்பையில் போரி பந்தருக்கும் தானேக்கும் இடையில் ஆரம்பித்தது.

1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அடிமை முறையை ஒழிக்கும் சட்டம் வாசிங்டன், டி. சி.யில் அமுலுக்கு வந்தது.

1876 – பல்கேரியாவில் உதுமானியப் பேரரசுக்கெதிராக புரட்சி வெடித்தது.

1885 – இலங்கையில் அஞ்சல் அலுவலக சேமிப்புத் திட்ட முறை அறிமுகமானது.

1912 – அரியெட் குயிம்பி என்னும் பெண் ஆங்கிலக் கால்வாயை வானூர்தியில் கடந்த முதல் பெண்ணாக சாதனை படைத்தார்.

1917 – நாடு கடந்த நிலையில் சுவிட்சர்லாந்தில் வாழ்ந்து வந்த விளாதிமிர் லெனின் உருசியா, பெத்ரோகிராத் திரும்பினார்.

1919 – போலந்து-சோவியத் போர்: போலந்து இராணுவம் வில்னியசு நகரை (இன்றைய லித்துவேனியாவில்) கைப்பற்ற வில்னா போர் நடவடிக்கையை ஆரம்பித்தது.

1919 – அம்ரித்சர் படுகொலையைக் கண்டித்து மகாத்மா காந்தி ஒரு நாள் உண்ணாநோன்பு இருந்தார்.

1925 – பல்கேரியா தலைநகர் சோஃபியாவில் சென் நெடெலியா ஆலயத்தில் கம்யூனிஸ்டுகள் தாக்கியதில் 150 பேர் கொல்லப்பட்டு 500 பேர் படுகாயமடைந்தனர்.

1941 – இரண்டாம் உலகப் போர்: படை நடவடிக்கை 25 ஆரம்பித்ததை அடுத்து, குரோவாசியாவின் ஆட்சியை நாட்சி ஆதரவு “உசுத்தாசே என்ற அமைப்பிடம் அச்சு நாடுகள் ஒப்படைத்தது.

1943 – ஆல்பர்ட் ஹாப்மன் தற்செயலாக லைசெர்ஜிக் ஆசிட் டைதைலமைடு மருந்தில் இல்பொருள்தோற்ற விளைவைக் கண்டுபிடித்தார்.

1944 – இரண்டாம் உலகப் போர்: கூட்டுப் படையினர் பெல்கிரேட் மீது தாக்குதலைத் தொடுத்தனர். 1,100 பேர் கொல்லப்பட்டனர்.

1945 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் செஞ்சேனை செருமனியப் படைகளுக்கெதிரான தமது கடைசிப் போரை பெர்லினைச் சுற்றி ஆரம்பித்தனர்.

1945 – இரண்டாம் உலகப் போர்: அகதிகளை ஏற்றிச் சென்ற கோயா என்ற செருமனியின் கப்பல் ஒன்று சோவியத் நீர்மூழ்கியால் தாக்கப்பட்டு மூழ்கியதில் 7,000 பேர் கொல்லப்பட்டனர்.

1947 – அமெரிக்காவின் டெக்சாஸ் துறைமுகத்தில் சரக்குக் கப்பல் ஒன்று வெடித்ததில் டெக்சாஸ் நகரம் தீப்பிடித்தது. 600 பேர் இதில் உயிரிழந்தனர்.

1947 – சோவியத்- ஐக்கிய அமெரிக்கா இடையேயான உறவுகளை பனிப்போர் என அமெரிக்க பொருளாதார ஆலோசகர் பெர்னார்ட் பாருக் என்பவர் முதன் முதலாக வர்ணித்தார்.

1961 – கியூபா தலைவர் பிடல் காஸ்ட்ரோ தான் ஒரு மார்க்சிய-லெனினியவாதி என்றும், கியூபா பொதுவுடைமை நாடு எனவும் அறிவித்தார்.

1966 – முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூரில் ஆரம்பமானது.

1972 – நாசாவின் அப்போலோ 16 விண்ணுக்கு ஏவப்பட்டது.

1992 – மொசாம்பிக், மபூட்டோவில் கத்தீனா பி என்ற சரக்குக் கப்பல் மூழ்கியதில் 60,000 தொன் பாறை எண்ணெய் கடலில் கரைந்தது.

2007 – ஐக்கிய அமெரிக்காவின் வேர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் கொரிய மாணவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தமிழகப் பேராசிரியர் லோகநாதன் உட்பட 33 பேர் கொல்லப்பட்டு 29 பேர் காயமடைந்தனர்.

2013 – ஈரான், சீசுத்தான் பலுச்சித்தா மாகாணத்தில் 7.8-அளவு நிலநடுக்கம் தாக்கியதில் 35 பேர் உயிரிழந்தனர், 117 பேர் காயமடைந்தனர்.

2014 – தென் கொரிய பயணைகள் கப்பல் செவோல் ஜின்டோ தீவில் மூழ்கியதில் 304 பேர் உயிரிழந்தனர்.

இன்றைய தின பிறப்புகள்

1660 – ஹேன்ஸ் ஸ்லோன், ஐரிய-ஆங்கிலேய மருத்துவர் (இ. 1753)

1813 – சுவாதித் திருநாள் ராம வர்மா, திருவிதாங்கூர் சமத்தான மன்னர் (இ. 1846)

1848 – கந்துகூரி வீரேசலிங்கம், இந்திய எழுத்தாளர், செயற்பாட்டாளர் (இ. 1919)

1851 – பொன்னம்பலம் இராமநாதன், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (இ. 1930)

1867 – வில்பர் ரைட், அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர் (இ. 1912)

1886 – பி.ஸ்ரீ., தமிழகப் பேச்சாளர், எழுத்தாளர், பதிப்பாசிரியர், வரலாற்று ஆசிரியர் (இ. 1981)

1889 – சார்லி சாப்ளின், ஆங்கிலேய நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் (இ. 1977)

1896 – ராமச்சந்திர தீட்சிதர், தமிழக இந்தியவியலாளர், திராவிடவியலாளர் (இ. 1953)

1906 – கனஞ்சம் பட்டி சிதம்பர அருணாச்சல ஞானகிரி, தமிழக பன்மொழி ஆய்வாளர்

1922 – அநுத்தமா, தமிழக எழுத்தாளர் (இ. 2010)

1927 – திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் (இ. 2022)

1935 – சுபத்திரன், ஈழத்து முற்போக்கு இலக்கியக் கவிஞர் (இ. 1979)

1940 – இராயப்பு யோசேப்பு, இலங்கை கத்தோலிக்க ஆயர் (இ. 2021)

1951 – ம. சூ. நாராயணா, இந்திய நடிகர், இயக்குனர் (இ. 2015)

1953 – நிழல்கள் ரவி, தென்னிந்தியத் திரைப்பட நடிகர்

1957 – பெரியசாமி சந்திரசேகரன், இலங்கை மலையக அரசியல்வாதி, தொழிற்சங்கவாதி

1961 – ஜார்பம் காம்லின், அருணாச்சலப் பிரதேசத்தின் 7வது முதலமைச்சர் (இ. 2014)

1963 – சலீம் மாலிக், பாக்கித்தானியத் துடுப்பாளர்

1969 – சௌம்யா, தமிழக கருநாடக இசைப் பாடகி

1971 – செலெனா, அமெரிக்கப் பாடகி, நடிகை (இ. 1995)

1978 – லாரா தத்தா, இந்திய நடிகை

1986 – பவுல் டி ரெஸ்டா, இசுக்கொட்டிய வாகன ஓட்ட வீரர்

இன்றைய தின இறப்புகள்

1783 – கிறித்தியன் மேயர், செக் வானியலாளர் (பி. 1719)

1828 – பிரான்சிஸ்கோ கோயா, எசுப்பானிய-பிரான்சிய ஓவியர் (பி. 1746)

1879 – பெர்னதெத் சுபீரு, பிரான்சியப் புனிதர் (பி. 1844)

1888 – சிக்முந்த் வுரூபிளேவ்ஸ்கி, போலந்து இயற்பியலாளர், வேதியியலாளர் (பி. 1845)

1958 – உரோசலிண்டு பிராங்குளின், ஆங்கிலேய உயிரியற்பியலாளர் (பி. 1920)

1970 – ரிச்சர்ட் நியூட்ரா, ஆத்திரிய-அமெரிக்கக் கட்டிடக்கலைஞர் (பி. 1892)

1972 – யசுனாரி கவபட்டா, நோபல் பரிசு பெற்ற சப்பானிய எழுத்தாளர் (பி. 1899)

2007 – கோ. வா. உலோகநாதன், இந்திய-அமெரிக்கப் பொறியியலாளர், கல்வியாளர் (பி. 1954)

2007 – சந்திரபோஸ் சுதாகரன், இலங்கை ஊடகவியலாளர்

2010 – கோயம்புத்தூர் கிருஷ்ணாராவ் பிரகலாத், இந்திய-அமெரிக்க மேலாண்மை வல்லுநர் (பி. 1941)

2013 – சார்லஸ் புரூசன், ஜிப்ரால்ட்டர் அரசியல்வாதி (பி. 1938)

2013 – எல். கே. பி. லகுமையா, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், காந்தியவாதி (பி. 1913)

இன்றைய தின சிறப்பு நாள்

பெரும் இன அழிப்பு நினைவு நாள் (அங்கேரி)

உலகக் குரல் நாள்