தவெக- வின் முதல் மாநாடு இன்று விக்கிரவாண்டியில் மிகப் பிரம்மாண்டமாக நடக்க இருக்கின்றது. இந்நிலையில் விஐபிகள் குறித்த சுவாரசிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன.தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய் தன்னுடைய கோடிக்கணக்கான சம்பளத்தை உதறிவிட்டு தற்போது அரசியலுக்குள் கால் பதித்துள்ளார். இந்த வருடத்தின் துவக்கத்தில் தன்னுடைய அரசியல் கட்சியை தமிழக வெற்றி கழகம் என அறிவித்தார். இதனை தொடர்ந்து அவருடைய முதல் மாநாடு இன்று விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளதால் பலர் குடும்பம் குடும்பமாக வந்து கொண்டிருக்கின்றனர். மேலும் சுற்று வட்டாரத்தில் இருக்கும் எல்லா ஹோட்டல்களும் ஹவுஸ்புல் ஆகி இருக்கின்றது.

இந்த மாநாட்டில் முதல் வரிசையில் விஐபிகள் இடம் ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும் இதில் ஆச்சரியப்படும் வகையில் மாநாட்டிற்கு நடிகை மற்றும் பிரபல நடிகர் அஜித்தின் மனைவியுமான ஷாலினி அஜித் கலந்துகொள்ள அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.சினிமாவில் தனக்கு போட்டியாக இருந்தாலும் விஜய்யின் இந்த முடிவிற்கு அஜித் தரப்பு ஆதரவு தெரிவித்து வருவதாகவும் கூறப்படுகின்றது. அது மட்டுமல்லாமல் நிகழ்ச்சி தொடங்கிய பின்னர் விஐபிகள் பலரின் வீடியோ வாழ்த்துக்களும் மேடையில் ஒளிபரப்ப இருக்க படுகிறதாம். இதில் பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி உள்ளிட்ட பிரபங்கள் விஜய்க்கு வாழ்த்து சொல்லி இருப்பதாகவும் கிசுகிசுக்கள் வெளியாகியுள்ளன.