
2024-25ம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்து வருகிறார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். திருக்குறள் ,சிலப்பதிகாரத்தை மேற்கோள் காட்டி வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து வருகிறார். அதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. அந்தவகையில் “மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்” என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்படுவதாக அமைச்சர் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள விலை நிலங்களின் மண்வளத்தை காப்பதற்கு 22 இனங்களுடன் 206 கோடி நிதியில் செயல்படுத்தப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.