பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழக அரசின் 2024-25 நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வேளாண்மை & உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் இன்று 4ஆவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்து, ‘உழவர்களை வளர்ச்சிக்கு அழைத்துச் செல்லும் பட்ஜெட்’ என்ற தலைப்பின் கீழ் இதனை வாசித்து வருகிறார். சுமார் 1.30 மணி நேரம் பட்ஜெட் உரையை அவர் வாசிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. அதன்படி பத்தாயிரம் விவசாயிகளுக்கு தலா இரண்டு மண்புழு உர படுக்கைகள் வழங்கிட ஆறு கோடி ரூபாய் மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் நிறைவேற்றப்படாமல் இருந்த பாசன மின் இணைப்புக்கான விண்ணப்பங்களில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 1.50 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் நடப்பாண்டில் 50,000 மின் இணைப்புகள் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.