இந்தியாவில் மக்கள் பலரும் ரயில் பயணத்தை விரும்புகின்றனர். நீண்ட தூர பயணங்களுக்கு மிக குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும் என்பதால் பெரும்பாலானோர் ரயில்களில் பயணிக்கின்றனர். இவ்வாறு ரயிலில் பயணிக்கும் போது ரயில்வே சேவைகளுக்காக மொபைலில் பல செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டி இருக்கும். ஆனால் இந்த பிரச்சனை விரைவில் தீர்க்கப்பட உள்ளது. தற்போது அனைத்து செயலைகளும் இணைக்கப்படும் சூப்பர் ஆப்பை அறிமுகப்படுத்த ரயில்வே நிர்வாகம் தயாராகி வருகின்றது.

இதன் மூலம் இனி ரயில்வே தொடர்பான அனைத்து சேவைகளும் ஒரே செயலியில் கிடைக்கும். அதாவது டிக்கெட் முன்பதிவு செய்ய அல்லது ரயில்களை கண்காணிப்பதற்கு மொபைலில் தனி செயலிகள் இருக்க வேண்டிய அவசியம் இருக்காது. ரயில்வேயில் சூப்பர் ஆப் மூலம் மட்டுமே இந்த பணியை பயணிகள் மேற்கொள்ள முடியும். ரயில்வே தொடர்பான அனைத்து சேவைகளையும் ஒரே செயலியில் கொண்டு வருவதன் மூலம் பயணிகளின் வேலையை எளிதாக்குவது இதன் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் Rail Madad, UTS மற்றும் National Train Enquiry System போன்ற Appகள் இருக்கும். தவிர, Portrade, Saatkar, TMS-Inspection போன்ற சேவைகளும் சேர்க்கப்படும். இதனுடன் IRCTC Rail Connect, IRCTC e-Catering Food on Track மற்றும் IRCTC Air போன்ற பல நன்கு அறியப்பட்ட தனித்த appகளும் சேர்க்கப்படும்.