
விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 8 என்ற தொடரில் புதிதாக நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். இதில் இந்த வார நாமினேஷன் அறிவிப்பை வார இறுதியில் வெளியிடுவர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் மக்கள் நாமினேஷன் அடிப்படையில் ஒரு நபர் வெளியேற்றப்படுவார். இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் பல பிரச்சனைகள் நடந்து வருகின்றன. இதில் சாச்சனா தனக்கு சாப்பாடு கேட்டும் கொடுக்கவில்லை என அன்ஷிதாவிடம் சண்டையில் ஈடுபட்டார். இதுகுறித்து இந்த வார இறுதியில் விஜய் சேதுபதியிடம் சாச்சனா கூறினார்.
இந்த சண்டை குறித்து இருவரிடமும் அவரவர் கருத்தை கேட்டு அறிந்து பின்பு விஜய் சேதுபதி சாச்சனாவிடம் கூறியதாவது, “சாச்சனா பிக் பாஸ் எல்லாம் உன்னுடைய வீடு இல்லை. வீட்டில் இருப்பது போல எல்லோரும் கவனித்துக் கொள்ள மாட்டார்கள். உனக்கும் இந்தப் போட்டியில் பங்கு உள்ளது. இந்த வீட்டில் உள்ள அனைத்திலும் உனக்கும் உரிமை உள்ளது. உனக்குத் தேவை என்றால் நீ தான் கேட்டு வாங்க வேண்டும். அதை மற்றவர்கள் செய்ய வேண்டும் என நீ எதிர்பார்ப்பது சரியானது அல்ல”. இவ்வாறு நடிகர் விஜய் சேதுபதி சச்சனாவிடம் எடுத்துக் கூறினார்.