தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ரவி மோகன். இவர் தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துவரும் “பராசக்தி” திரைப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இந்த படத்தினை சுதா கொங்கரா இயக்குகிறார். இதைத் தொடர்ந்து “ஜீனி” ,”கராத்தே பாபு” போன்ற படங்களிலும் ரவி மோகன் நடித்து வருகிறார்.

இவர் தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதற்காக விண்ணப்பித்திருக்கும் நிலையில் இவரை பற்றி பல விமர்சனங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரவி மோகன் தனது மனைவி மற்றும் மகன்களை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் அவரது மூத்த மகன் ஆரவின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக தனது 2 மகன்களையும் ரவி மோகன் சந்தித்தார். அவர்கள் மகிழ்ச்சியாக பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் அவர்கள் எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் ரவி மோகன் பதிவிட்டிருந்தார்.

இதைத்தொடர்ந்து ஆர்த்தி சமூக வலைதளங்களில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவு தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. அதில் அவர் “சில நேரங்களில் சூழ்ச்சி என்பது அன்பு போல தோன்றலாம்” என்று கூறியிருக்கிறார். மேலும் ஆர்த்தி வெளியிட்ட பதிவு ரவி மோகன் தனது மகன்களை சந்தித்ததை வைத்து தான் வெளியிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.