
நடிகர் விஜய்யின் திருப்பாச்சி பட தொடரில் நடித்தவர் நடிகர் பெஞ்சமின். இவர் தமிழ் படங்களில் துணை வேடங்களில், காமெடி காட்சிகளில் நடித்துள்ளார். மேலும் நடிகர் பெஞ்சமின் விஜய், அஜித், கமல்ஹாசன் மற்றும் வடிவேலு போன்ற நடிகர்களுடன் 40க்கும் மேற்பட்ட படங்களில் இணைந்து நடித்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் நடிகர் பெஞ்சமின் வீடியோ ஒன்றின் மூலம் தனது மரணம் குறித்த புரளியை தெளிவுபடுத்தி உள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, நான் இறக்கவில்லை உயிரோடு தான் இருக்கிறேன். இது முதன் முறையல்ல 4ஆவது முறை.நான் இறந்து விட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன.
நான் தற்போது பரமத்தி வேலூரில் ஒரு படப்பிடிப்பில் உள்ளேன். சமூக ஊடகங்களில் வியூஸ் வர வேண்டும் என்பதற்காக சிலர் இதுபோன்ற தவறான செய்திகளை பரப்புகின்றனர். இதுபோன்ற போலியான செய்திகள் தான் மிகவும் வருத்தப்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.