பிரதமர் நரேந்திர மோடி உடல் உறுப்பு தானம் செய்பவர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள் என்று கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி மனதின் குரல் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, இந்தியாவில் தற்போது உறுப்பு தானம் அதிகரித்துள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு 5000-க்கும் குறைவான உடல் உறுப்பு தானங்கள் பதிவு செய்யப்பட்டது.

ஆனால் அது கடந்த 2022-ம் ஆண்டு 15000 ஆக அதிகரித்துள்ளது. ஒருவர் உடல் உறுப்பு தானம் செய்வதன் மூலம் ஒரு நபரால் 7 முதல் 8 பேரின் உயிரை காப்பாற்றலாம். இதன் காரணமாக உடல் உறுப்பு தானம் செய்ய முன் வருபவர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள் என்று பிரதமர் மோடி கூறினார்.