செய்தியாளர்களிடம் பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழ்நாட்டில் ஜாதி வாரி கணக்கெடுப்பை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். சமீபத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் பிரதமர் மோடி அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். அதில் மத்திய அரசு இந்தியாவில் வருகின்ற மக்கள் தொகை கணக்கெடுப்பில் கூடுதலாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற ஒரு கோரிக்கை விடுத்திருக்கிறார்.

அதாவது வெண்ணெயை கையில் வைத்துக் கொண்டு, நெய்க்கு அழைக்கின்ற ஒரு சூழல் தமிழ்நாட்டில் இருக்கிறது. தமிழ்நாட்டின் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசுக்கு எல்லா அதிகாரமும் இருக்கிறது. அது சமீபத்தில் பீகார் மாநிலத்தில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

பீகார் அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம் என்று அறிவித்த பிறகு,  அதனை எதிர்த்து நீதிமன்றத்தில் பல வழக்குகள் போட்டார்கள். ஆனால் பீகார் உயர்நீதிமன்றத்தில் எந்த தடையும் கொடுக்கவில்லை. பிறகு உச்ச நீதிமன்றமும் சாதிவாரி கணக்கெடுப்பு தரவுகளை வெளியிட  எந்த தடையும் இல்லை என்று உறுதி படுத்தி உள்ளார்கள். ஆக அதை வைத்து நிச்சயமாக தமிழ்நாட்டில் அறிவிக்கலாம் என தெரிவித்தார்.