அரியலூர் மருத்துவக் கல்லூரியில் ரூபாய் 22 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்திற்கு நீட் தேர்வுக்கு எதிராக போராடி தன் உயிரை மாய்த்த மாணவி அனிதாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அரியலூர் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசியதாவது, நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் கேட்டார். ரகசியம் எல்லாம் இல்லை. எங்கள் கல்வி உரிமை பறிக்கப்படும் போது தைரியமாக குரல் கொடுக்கிறோமே அதுதான் அந்த ரகசியம். அனிதா பேரில் உள்ள இந்த மருத்துவ அரங்கம் அதற்கு சாட்சி. மேலும் நான் பிரதமர் மோடியை சந்தித்தபோது நீட் தேர்வுக்கு எதிரான சட்ட போராட்டங்கள் தொடரும் என அவரிடம் கூறினேன் என்று கூறினார்.