
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சன்னிலியோன். கவர்ச்சி புயல் சன்னிலியோனுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் படங்களில் நடிப்பது மற்றும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவது என படு பிஸியாக வலம் வருகிறார். இவர் தற்போது பிரபுதேவா நடிக்கும் பேட்ட ராப் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை சன்னி லியோன் மலையாள சினிமாவில் வெளியான ஹேமா கமிட்டி அறிக்கை குறித்தும் பாலியல் புகார் குறித்தும் தற்போது பேசியுள்ளார். அதாவது கொச்சியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் நடிகை சன்னி லியோன் மற்றும் பிரபுதேவா கலந்து கொண்டனர்.
அப்போது சன்னி லியோனிடம் பாலியல் பிரச்சனைகள் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது, நோ சொல்ல வேண்டிய இடத்தில் கண்டிப்பாக நோ சொல்ல வேண்டும். இழப்புகளைப் பற்றி கவலைப்படாமல் அந்த இடத்தை விட்டு வெளியேற தயாராக இருக்க வேண்டும். நான்தான் நமக்கான எல்லைகளை தீர்மானிக்க வேண்டும். எப்போதும் முடிவில் உறுதியாக இருக்க வேண்டும் என்று கூறினார். மேலும் அதற்கு அடுத்தபடியாக பேசிய நடிகர் பிரபுதேவா இதுபோன்ற பிரச்சனைகள் கடந்த சில வருடங்களாக நடந்து வருவதாகவும் கண்டிப்பாக இந்த பிரச்சனைக்கு நியாயம் கிடைக்க வேண்டும் எனவும் கூறினார்.