மலையாள சினிமாவில் நடக்கும் பாலியல் பிரச்சினைகள் குறித்து ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிக்கை வெளியானதில் இருந்து நடிகைகள் பலரும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து வெளிப்படையாக பேசி வருகிறார்கள். அதன் பிறகு பல முன்னணி மலையாள நடிகர்கள் மீது பாலியல் புகார்கள் குறித்து வழக்கு பதிவு செய்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் மொத்த திரை உலகமும் அதிர்ச்சியில் இருக்கும் நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திடம் ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் ஹேமா கமிட்டி அறிக்கை பற்றி தனக்கு எதுவுமே தெரியாது என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார். இந்த பிரச்சனையால் கேரளாவில் நடிகர் சங்கம் கலைக்கப்பட்ட நிலையில் தலைவர் பதவி வகித்த மோகன்லால் உள்ளிட்ட அனைவரும் ராஜினாமா செய்தனர். மேலும் இப்படி மொத்த திரையுலகையும் அதிர்ச்சிகுள்ளாக்கிய ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து தனக்கு எதுவும் தெரியாது என நடிகர் ரஜினிகாந்த் நைசாக நழுவியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.