ஆசிரியர் பணியில் சேர்வதற்கான வயது வரம்பை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பொது பிரிவினருக்கு ஆசிரியர் பணியில் சேர 53 வயது,  இதர பிரிவினருக்கு 58 வயதாக நிர்ணயம் செய்து அரசாணை வெளியாகி உள்ளது.  பொது பிரிவினர் ஆசிரியர் பணியில் சேர்வதற்கான வயது வரம்பு உயர்த்தப்படும் என முதல்வர் அறிவித்த நிலை அறிவித்திருந்த நிலையில் தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.