புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேங்கைவையில் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தண்ணீரை குடித்த பல சிறுவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இந்த சம்பவத்தில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்தார்.

இந்நிலையில் வேங்கை வயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டது தொடர்பாக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சத்யநாராயணன் தலைமையில் தனி நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையம் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தி 2 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இதற்கு முன்னதாக இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தற்போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.