
பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் ஆலியா பட். இவர் Eternal Sunshine Productions என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில் அவருடன் பணியாற்றிய முன்னாள் உதவியாளர் வேதிகா பிரகாஷ் செட்டி என்பவர் தயாரிப்பு நிறுவனம் மற்றும் ஆலியாவிடம் இருந்து போலி பில் மூலம் ரூ.76. 9 லட்சம் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து அவரது தாயார் அளித்த புகாரின் பெயரில் வேதிகாவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த மோசடி கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் முதல் 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை வரையில் உள்ள காலகட்டத்தில் நடந்ததாக கூறப்படுகிறது. ஆலியா பட் தற்போது ஆல்பா படத்தின் படபிடிப்பில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.