இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

 

அதாவது அந்த வீடியோவில் சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்லும் ஒருவர் அங்குள்ள குரங்குகளுக்கு உணவளித்துக் கொண்டே செல்கிறார். அதாவது இரு பக்கமும் காடுகள் போல தோற்றமளிக்கும் ஒரு சாலையில் இரு சக்கர வாகனத்தில் ஒருவர் செல்கிறார். அங்கு குரங்கு நடமாட்டம் அதிகமாக உள்ளது.

இந்நிலையில் அவர் அந்த குரங்குகளுக்கு பைக்கில் சென்றவாறு உணவளிக்கிறார். இதனால் குரங்குகள் வேகமாக ஓடி வந்து உணவுகளை உண்ணும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இதனை அவரது பின்னால் வந்த காரில் இருந்தவர்கள் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.