செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,  உத்தரபிரதேச மாநில சாமியார் அப்படி பேசியது தவறு. நான் அன்னைக்கே கண்டித்தேன். அந்த மாதிரி யாராவது விலை வைக்கின்றார்கள் என்றால் ? முதல்ல அவர்கள் சனாதன தர்மத்தை பின்பற்றவில்லை என்பது அர்த்தம். நான் ஒருத்தருக்கு விலை வைப்பேன் அப்படின்னா… இன்னொருத்தர் உயிரை எடுப்பது நமக்கு என்ன உரிமை இருக்கிறது ? நாம என்ன கடவுளா ?

யாருக்கும் அந்த உரிமை இல்லை. அப்படி யாராவது இந்தியாவில் சனாதன தர்மத்தை பின்பற்றுவேன். நான் ஒருத்தரோட தலைக்கு விலை வைக்கின்றேன் அப்படின்னா….   அவர் முதலில் போலி சாமியாரகதான் இருக்க வேண்டும்.  அதையெல்லாம் தாண்டி,  அவர் சனாதன தர்மம் என்பது தெரியாமல் பேசணும். அதனால நான் இதை வன்மையாக கண்டிக்கிறேன், இது ஏற்புடையதல்ல. இதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.

சினிமா அரசியல் பேச முக்கியமான கருவி. எத்தனையோ கருத்தாக்கம் காலம் காலமாக சினிமாவில் இருந்து வருது. நாம்  பார்க்கிறோம். குறிப்பாக தமிழக அரசியலை பொருத்தவரை சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி  இருக்கு. எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு நம்முடைய மாநிலத்தில் சினிமா அரசியலில் ஆதிக்கம் செலுத்தி இருக்கு என தெரிவித்தார்.