
கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் பட்ட துயரத்தினை அடிப்படையாக கொண்டு பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் “தங்கலான்” படம் உருவாகிறது. நீண்ட இடைவேளைக்கு பின் தமிழில் பார்வதி நடிப்பது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதோடு மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ஜி.வி.பிரகாஷ் இப்படத்துக்கு இசையமைக்கிறார். தங்கலான் படத்தின் சூட்டிங் இப்போது கேஜிஎஃப்பில் நடந்து வருவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் இப்படத்தில் ஆங்கில நடிகர் டேனியல் கால்டகிரோன் இணைந்து உள்ளார். நடிகர் விக்ரம் தன் டுவிட்டர் பக்கத்தில் இவரை அறிமுகப்படுத்தி உள்ளார். வேட்டைக்காரனை தங்கலான் படப்பிடிப்பிற்கும் சமூகவலைதளத்திற்கும் வரவேற்கிறேன் என்று பதிவிட்டுள்ளார் விக்ரம்.