
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மடக் மாவட்டம் பஷ்யல்ராம் பகுதியில் ரசாயன தொழிற்சாலை ஒன்று பயங்கர வெடி விபத்துக்குள்ளானது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த ரசாயன தொழிற்சாலையில் மருந்து தயாரிப்பிற்கான ரசாயன கலவை தயாரிக்கப்பட்டு வருகிறது. நேற்று மருந்து தயாரிப்புக்கான ரசாயன கலவை எந்திரத்தில் இருந்தபோது பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் தொழிற்சாலையில் இருந்த 143 பணியாளர்களில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அது குறித்து அறிந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் மீட்புக் குழையவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் விபத்தில் சிக்கிய நபர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
அந்த விபத்தில் தற்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42ஆக உயர்ந்துள்ளது. மேலும் படுகாயம் அடைந்தவர்கள் சிலரின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டுள்ளார். பின்னர் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இச்சம்பவம் பெறும் வேதனை அளிக்கிறது. இதுகுறித்து ஆலை நிர்வாகத்திடம் பேச நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் 1 கோடி இழப்பீடு பெற்று தர அரசு நடவடிக்கை எடுக்கும். அதற்கான உத்தரவுகளை பிறப்பித்து உள்ளேன் எனக் கூறியுள்ளார்.
மேலும் இதுகுறித்து பேசிய அவர், விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூபாய் 10 லட்சமும், காயமடைந்தவர்கள் குணமடைந்து பணிக்கு திரும்பக் கூடிய அளவுக்கு குணமாகினால் அவர்களுக்கு ரூபாய் 5 லட்சமும் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் அரசு தரப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ. 50000 வழங்கப்படும் என தெரிவித்தார்.