தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாகவே தூய்மை பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் போன்றவருக்கு சரியாக சம்பளம் கொடுக்கப்படவில்லை என்று சமூக வலைதளங்களில் தீயாய் தகவல் பரவி வந்தது. இது தொடர்பாக தமிழகத்தில் உள்ள அனைத்து பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் பேரூராட்சி துப்புரவு பணி ஆய்வாளர்கள் முன்னிலையில் நேற்று தீவிர விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணை முடிவில் அனைத்து துப்புரவு பணியாளர்கள் ஓட்டுநர்களுக்கும் ஒவ்வொரு மாதமும் ஐந்தாம் தேதி எவ்வித பாக்கியுமே  இல்லாமல் சம்பளம் வழங்கப்படுவதாக கூறப்பட்டது.

இதனால் சமூக வலைதளங்களில் பரவும் தகவல் போலியானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தமிழகத்தில் வேலை பார்த்து வரும் அனைத்து துப்புரவு பணியாளர்கள், அலுவலக பணியாளர்களுக்கும் கால தாமதம் இல்லாமல் சரியான நேரத்தில் சம்பளம் வழங்கப்படும் எனவும் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.