வரும் செப்டம்பர் 15ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என்று தகவல் தெரிவித்து இருக்கிறார்.

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் அடுத்த வாரம் நடைபெற உள்ளது.  செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி அன்று இந்த கூட்டத்தொடர் தொடங்குகிறது. 22ஆம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஒவ்வொரு நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு முன்பாக  எப்படி  மக்களவை ? மாநிலங்களவை கட்சிகளின் குழு தலைவர்களை அழைத்து,  அவர்களுடன் நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவதற்காக அரசு ஆலோசனை நடத்துமோ,  அதேபோல இந்த முறையும் நடைபெறும் என மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்திருக்கிறார்.

அதற்காக 17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4:30 மணிக்கு கூட்டம் நடத்தப்படும் என அரசு இமெயில் மூலமாக மக்களவை மற்றும் மாநிலங்களவை அனைத்து கட்சி குழு தலைவர்களுக்கு தகவல் அனுப்பி இருக்கின்றது. ஆகவே அவர்கள் அந்த கூட்டத்தில் பங்கேற்று, நாடாளுமன்ற கூட்டத்தொடர்பிலே என்னென்ன விவாதங்களுக்கு எதிர்க்கட்சிகளுக்கு அவகாசம் தேவை என்பதை வலியுறுத்தலாம். அதைவிட மிகவும் முக்கியமாக இந்த கூட்டத்தொடர் அறிவிக்கப்பட்டிருக்கிறதே தவிர, கூட்டத்தொடரின் அலுவல் என்ன ?

என்ன மசோதாக்கள் விவாதத்திற்கு கொண்டுவரப்படும் அல்லது வேறு என்ன தீர்மானங்கள் கொண்டுவரப்படும் ? என்பது குறித்து எந்த விதமான தகவலும் இதுவரை அளிக்கப்படவில்லை. ஆகவே ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு நடைபெறும் கூட்டத்திலே எதிர்க்கட்சிகள் மீண்டும் ஒருமுறை மத்திய அரசிடம் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்துடன் நோக்கம் என்ன ? என்ன  மசோதாக்கள் விவாதத்துக்கு கொண்டுவரப்படுகின்றன ?  வேறு தீர்மானங்கள் ஏதாவது கொண்டுவரப்படுமா ? இந்த சிறப்பு கூட்டத்திற்கு காரணம் என்ன ? என்று பல்வேறு கேள்விகள் கேட்டக  திட்டமிட்டு இருக்கின்றனர்.

அன்று இந்த கேள்விகளுக்கு பதில் கிடைக்கலாம். ஏனென்றால் திங்கள் கிழமை கூட்டத்தொடர் தொடங்க இருப்பதால்,  ஞாயிற்றுக்கிழமை இது குறித்து தகவல்களை அரசு எதிர்க்கட்சித் தலைவருக்கு தெரிவிக்கலாம் என அவர்கள் நம்புகிறார்கள். ஆகவே இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கூட்டமாக இருக்கும்  என பார்க்கப்படுகின்றது.