எம்.பி தயாநிதிமாறன் ஒன்றிய அமைச்சர் ராம்மோகன் நாயுடுவுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது, சென்னை விமான நிலையத்தில் உள்ள அசுத்தமான கழிவறை, wi-fi குறைபாடு, நெரிசலான ஓய்வு அறை, தரமற்ற உணவுகள் உள்ளிட்டவை பயணிகளுக்கு மோசமான அனுபவத்தை அளித்து வருகின்றனர்.

சென்னைக்கு உலகத்தரம் வாய்ந்த விமான நிலைய உள்கட்டமைப்பு கிடைப்பதை உறுதி செய்ய உங்கள் உடனடி நடவடிக்கையை எதிர்பார்க்கிறோம். இந்த பிரச்சனைகளை கருத்தில் கொண்டு உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், பயணிகள் வசதிகளில் ஏற்படும் சிக்கல்களை சரி செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்க உத்திரவிட வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.