தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அம்மாபேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த பகுதியில் அறுவடை பணிகள் முழு வீட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கிற நிலையில் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலமாக விற்பனை செய்து வருகின்றனர். இதில் ஏராளமான விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையம் முன்பாக நெல்லை கொட்டி வைத்து விற்பனை செய்வதற்காக காத்திருக்கின்றார்கள். ஆனால் கொள்முதல் நிலையங்களின் முன்பாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்மூடைகள்  அனைத்தும் வெட்ட வெளியில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கிறது.

இதனை பாதுகாப்பான இடங்களுக்கு எடுத்துச் செல்வதற்கு உண்டான பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என விவசாயிகள் கவலை தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக அறுவடை பருவத்தை தாண்டியும் விவசாயிகள் பலர் அறுவடை செய்யாமல் இருக்கின்றனர். அதனால் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை நிலையத்தில் இருந்து உடனடியாக கொள்முதல் நிலையத்திலிருந்து உடனடியாக தஞ்சை மாவட்ட தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக குடோனுக்கு எடுத்து சென்று பாதுகாப்பாக வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

அதனை தொடர்ந்து  அம்மாபேட்டை அருகே புதூர் கிராமத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையம் முன்பாக வெட்டவெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் முட்டைகளுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக மகசூல் பாதிக்கப்பட்டு இருக்கின்ற நிலையில் தற்போது அறுவடை செய்த நெல்லை  பாதுகாக்க சரியான நடவடிக்கை எடுக்கப்படாதது விவசாயிகள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. அரசு உரிய நிவாரண தொகையை வழங்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.