தென்னிந்தியாவின் திரைப்பட சங்கத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் தொடர்பாக அதன் தலைவர் ஆர். கே செல்வமணி சென்னை வடபழனியில் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

அதில் அவர் தெரிவித்ததாவது, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்பேளனம் கடந்த 55 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. அதில் 23 சங்கங்கள் செயல்படுகின்றன.

இந்நிலையில் தொழிலாளர்களின் வாழ்க்கையை முதலாளிகள் சிலர் அழிக்க முயற்சிப்பதாகவும், தொழிலாளர்களுக்கு எதிராக நடக்கும் கொடுமையை எதிர்க்கும் வகையில் வரும் மே 14ஆம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தமும் கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்த பெப்சி முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் நாள் அன்று எந்த ஒரு படப்பிடிப்புகளும், போஸ்ட் ப்ரொடக்ஷன், ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகளும் நடைபெறாது என்பதை திட்டவட்டமாக தெரிவித்தார்.