தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கம் சார்பாக சமீபத்தில் மறைந்த டிபி கஜேந்திரன், மயில்சாமி மற்றும் மனோபாலா ஆகியோருக்கு இரங்கல் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. உடல் நலக்குறைவினால் உயிரிழந்த மனோபாலா, மயில்சாமி மற்றும் டிபி கஜேந்திரன் ஆகிய மூன்று பேரும் காமெடி நடிகர்கள்.
இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் சங்க பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி முருகன், தயாரிப்பாளர் சங்க செயலாளர் ராதாகிருஷ்ணன், இயக்குனர் சங்க செயலாளர் ஆர்வி உதயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதோடு டெல்லி கணேஷ், சிம்ரன், மன்சூர் அலிகான், பசுபதி, தேவயானி போன்ற பல நடிகர் நடிகைகளும் கலந்து கொண்டனர்.
மேலும் இந்த நிகழ்வில் பேசிய நடிகர் கார்த்தி மறைந்த மூன்று பேரும் மற்றவர்களுக்கு உதவும் குணம் வாய்ந்தவர்கள் என்றும் அவர்கள் சினிமாவின் பொக்கிஷம் என்றும் அவர்களின் இறப்பு ஈடு செய்ய முடியாதது என்றும் கூறினார்.