சூரிய கிரகணத்தின் போது உலக்கைகள் எந்த வித பிடிமானமும் இல்லாமல் தரையில் செங்குத்தாக நிற்கும் என்பது முன்னோர்களின் கூற்று. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை வாவிக்கடை அருகே ஈஸ்வரமூர்த்தி என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் ஈஸ்வரமூர்த்தி சூரிய கிரகணத்தை முன்னிட்டு தனது வீட்டிற்கு முன்பு உள்ள சிமெண்ட் தளத்தின் மீது 5 அடி உயரம் கொண்ட உலக்கையை எந்தவித படிப்பும் இல்லாமல் நிறுத்தி காட்டினார். அந்த உலக்கை செங்குத்தாக நின்றது. இதனை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றுள்ளனர். காலை 7.10 மணி முதல் மதியம் 12.30 மணி வரை உலக்கை அசையாமல் அப்படியே நின்றது குறிப்பிடத்தக்கதாகும்.