சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அந்த நாய்கள் ஆட்சியர் அலுவலகத்தில் இருக்கும் உணவகங்களிலும், டீ கடைகளிலும் அடைக்கலம் புகுந்து அங்கும் இங்கும் சுற்றி திரிகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 70 நாய்கள் இருப்பதாக தெரிகிறது.

அந்த நாய்கள் காலையும், மாலையும் அங்கும் இங்கும் சுற்றி திரிந்து சிறுவர்களையும், முதியவர்களையும் அச்சுறுத்துவதால் நடை பயிற்சி செய்பவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் உணவுக்காக நாய்கள் சண்டையிட்டு பொதுமக்களுக்கு அருகே வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.